சிக்கன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள்?

Date:

சிக்கன் அசைவ உணவுகளில் மிக முக்கியமான ஒன்று. புரதச்சத்து நிறைந்த உணவு. சிக்கன் இறைச்சியை லீன் மீட் என்னும் வகைக்குள் அடக்குவார்கள். மற்ற இறைச்சி வகைகளைப் போல அல்லாமல் சிக்கனை பல வகைகளில் நம்முடைய வசதிக்கேற்ற வகையில் மிக எளிமையாகச் சமைக்க முடியும். அதேசமயம் அசைவ உணவுகளைப் பொருத்தவரையில் மிக எளிதாகக் கெட்டுப் போய்விடும்.

சிக்கன் வாங்கும்போது முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதனுடைய வாசனை தான். பிரெஷ் மாமிசத்தின் இறைச்சிக்கும் ஒன்றிரண்டு நாள் ஆன சிக்கனில் இருந்து வரும் துர்நாற்றத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதை மிக எளிதாகக் கண்டுபிடித்து விட முடியும். ரத்தம் உறைந்து போய் மோசமான வாசனை வந்தால் அந்த இறைச்சி பழையது. அதை ஒருபோதும் வாங்கிவிடாதீர்கள். சிக்கன் வெட்டி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரைக்குள் இருந்தால் நிச்சயம் ரத்த உறைவு துர்நாற்றம் இருக்காது. சிக்கன் கடைக்குள் முழுக்க ரத்த வாடையாக இருப்பதால் சில சமயங்களில் உங்களால் கண்டுபிடிக்க முடியாமல் கூட போகும். ஒரு சிறிய துண்டு சிக்கன் பீஸை வெளியில் காற்றோட்டமான இடத்திற்கு கொண்டு வந்து பாருங்கள். அந்த வாசனை வருகிறதா என்று. வரவில்லை என்றால் அது பிரெஷ்ஷான சிக்கன் தான். வாசனை வந்தால் அதை வாங்காதீர்கள்.

​பிங்க் நிறம்.

சிக்கன் வாங்கும் போது அடுத்ததாக கவனிக்க வேண்டிய விஷயம் அதனுடைய நிறம். ஆம். பிரெஷ்ஷான சிக்கன் எப்போதும் பிங்க் நிறத்தில் இருக்கும். காற்று படபட தோல் நிறம் மாறுவதாகக் கூட கடைக்காரர் சொல்லலாம். அப்படி சொன்னால் அறுத்துக் காட்டச் சொல்லுங்கள். சிக்கனை அறுக்கும்போது பிரெஷ் சிக்கனாக இருந்தால் நிச்சயம் பிங்க் நிறத்தில்தான் இருக்கும். பிரெஷ்ஷாக இல்லையென்றால் வெளியில் உலர்ந்து என்ன நிறத்தில் இருந்ததோ அதே நிறத்தில் இருக்கும். இதை வைத்து பிரெஷ் சிக்கனா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அதேபோன்று பிரெஷ் சிக்கனாக இருந்தால் எவ்வளவு கழுவி வைத்திருந்தாலும் அறுக்கும்போது லேசாக பிரெஷ்ஷான ரத்தம் இருக்கும். அப்படி ரத்தம் பிரெஷ்ஷாக வெளிவரவில்லை என்றால் அது நிச்சயம் பழைய சிக்கன் தான். அதை வாங்கக் கூடாது.

​பேக் செய்யப்பட்ட சிக்கன்

பெருநகரங்களில் எல்லா நேரங்களிலும் கடைக்குப் போகவும் அங்கு ஃபிரெஷ் சிக்கன் வாங்கவோ முடிவதில்லை. அதனால் மிக எளிமையாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் பேக் செய்யப்பட்ட சிக்கனை வாங்குகிறார்கள். அதுவே தவிர்க்கப்பட வேண்டியது தான். வேறு வழியின்றி அதை வாங்குவதாக இருந்தால் அவற்றிலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் அந்த பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் எக்ஸ்பயரி தேதியைப் பார்க்க வேண்டும். சில சமயங்களில் கடைகளில் அந்த பாக்கெட்டுகளின் ஒரிஜினல் எக்ஸ்பயரி தேதி கடைக்காரரால் மாற்றப்பட்டோ திருத்தி எழுதப்பட்டோ கூட இருக்கலாம். அதனால் தான் முற்றிலும் பேக் செய்யப்பட்ட சிக்கனை தவிர்ப்பது என்று சொல்லுகிறோம். அடுத்ததாக அந்த சிக்கன் கவரைப் பிரித்த பின் கெட்ட நாற்றம் வராமல் இருக்க வேண்டும்.

அடுத்த முறை சிக்கன் வாங்கக் கடைக்கும்போகும் பொழுது இந்த விஷயங்களை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பிரெஷ் சிக்கன் வாங்கி உண்டு மகிழுங்கள்

 

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்