உடலில் வர்ணம் பூசி நிர்வாணமாக வரும் மர்ம நபர்கள்; பெண்களை கட்டியணைத்து சில்மிசம்: வவுனியாவில் பீதி!

Date:

வவுனியா மதவுவைத்தகுளம் பிரதேசத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் கடந்த இருவாரங்களாக அதிகரித்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மதவுவைத்தகுளம் பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காணாத வகையில் உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு நிர்வாணமான நிலையில் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை இலக்கு வைத்தும், குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாத நேரங்களில் வீடுகளில் புகுந்தும் வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களிடம் தகாதமுறையில் நடந்துகாெள்ள முற்பட்டுள்ளனர்

குறித்த மர்ம மனிதர்களின் அட்டூழியங்கள் கடந்த இருவாரங்களாக அதிகரித்த நிலையில் மதவுவைத்த குளத்தில் வாழும் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ் விடயம் குறித்து இப் பிரதேச மக்கள் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபரிடம் நேற்று முன்தினம் (05) முறைப்பாடு செய்துள்ளனர்.

மர்மமனிதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் குறித்த பிரதேச மக்கள் நிம்மதியாக இரவு நேரங்களில் இருக்க முடியாது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறை விசாரணையில் பல மர்மங்கள்

6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை...

டெங்கு அபாயத்திலிருந்து மீள்கிறது கொழும்பு பல்கலைக்கழக அழகியல் பீடம்

டெங்கு பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தை...

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்