26.3 C
Jaffna
January 11, 2025
Pagetamil
மருத்துவம்

மாதவிடாய் வலியை இலகுவாக்க சிறந்த உடற்பயிற்சி இதோ!

மாதவிடாய் வலியை இலகுவாக்க சிறந்த உடற்பயிற்சி செய்தாலே போதும் வலியே தெரியாது.

மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலி மிகவும் வேதனையாகவும், சங்கடமாகவும் இருக்கும். அதற்கான அறிவியல் காரணம் கருப்பையின் சுருக்கமே ஆகும். அப்படிப்பட்ட வலியைப் போக்கும் எளிய உடற்பயிற்சிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வாங்க. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை போக்க ஆரோக்கியமான மற்றும் எளிதான வழிகளில் ஒன்று தான் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது. அப்படிப்பட்ட எளிய உடற்பயிற்சிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வாங்க.

மாதவிடாய் வலி

கருப்பையின் புறணியில் ஏற்படும் அழுத்தம் தான் உடலில் இருந்து யோனி வழியாக ஏற்படும் மாதவிடாய் இரத்த ஓட்டத்திற்கு வழி வகுக்கும். அதிக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அடிவயிற்றில் கடுமையான வலி இருக்கும். இந்த அசௌகரியத்தை போக்க சிலர் சொந்த வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். சில தாங்க முடியாத வலி ஏற்படும் சமயங்களில் மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் அசௌகர்யத்தை தனிக்க சூடான உணவை நாடுகின்றனர்.

யோகா

மாதவிடாயின் போது ஏற்படும் மனநிலை மாற்றங்கள் மிகவும் பொதுவானவை. எனவே, அந்த நேரத்தில் நீங்கள் யோகா பயிற்சி செய்வது உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. யோகா செய்வதன் மூலம் தசைகள் தளர்த்தப்படும். இது வலியைக் குறைத்து எளிதாக்குகிறது.

ஸ்ட்ரெச்சிங்

மாதவிடாய் சமயத்தின் போது உங்கள் உடலில் இருந்து இரத்தம் வெளியேறுவதால் சோம்பேறித்தனம் மற்றும் சொர்வான உணர்வு ஏற்படுவது இயற்கையானது. அதுபோன்ற சூழ்நிலையில் உங்களுக்கு படுக்கையை விட்டு எழுந்திரிக்கவே பிடிக்காது. ஆனாலும், நீங்கள் உடல் தசைகளை தளர்த்த சில அடிப்படை ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். பயிற்சிகளை வலியைக் குறைக்கச் செய்யும்.

டான்ஸ்

மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் எரிச்சலைப் போக்க உங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்பது நல்லது. பல்வேறு செயல்கள் உங்களை நன்றாக உணர வைக்கும். பிடித்த பாடல்களோடு நீங்கள் நடனமும் செய்தால் உங்கள் உடலில் தேங்கும் கலோரிகள் எரிக்கப்படும்.

நடைப்பயிற்சி

எல்லா வகையான உடற்பயிற்சியும் எண்டோர்பின் என்ற ஹார்மோன்களை தான் வெளியிடுகிறது. நடைப்பயிற்சி கூட இந்த ஹார்மோன்களைத் தான் ஊக்குவிக்கும். இந்த ஹார்மோன் தான் மூளையில் வலி ஏற்படும் உணர்வை நிறுத்தி வைக்கவும், பிடிப்புகளைக் குறைக்கவும்.

ஜாக்கிங்

ஜாக்கிங் கூட எண்டோர்பின் ஹார்மோன்களை வெளியிடும். இது உங்கள் தசைகளை தளர்த்த உதவும். அதோடு உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, ஆக்ஸிஜன் ஓட்டத்தையும் ஊக்குவிக்கும். மேலும், வீக்கத்துடன் ஏற்படக்கூடிய வலியைக் குறைக்கவும் ஜாக்கிங் உதவுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment