24.7 C
Jaffna
January 29, 2025
Pagetamil
சினிமா

பி.வி.சிந்துவுக்கு சூர்யா பாராட்டு.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் சென்றுள்ளனர். குறிப்பாக தமிழ் நாட்டிலிருந்து அதிகப்படியான வீரர்கள் சென்றுள்ளனர்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இரு முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் சிந்து. இந்நிலையில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள பி.வி.சிந்துவுக்கு தொடர்ச்சியாக பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசியல் தலைவர்கள் என தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை பலரும் பதக்கம் வென்றுள்ள சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள பி.வி.சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “அன்புள்ள பி.வி.சிந்து, ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற உங்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் வரலாறு படைத்து, பெரிய கனவு காணும் ஏராளமான சிறு பெண்களுக்கு ஊக்கமளித்துள்ளீர்கள். உங்களை நினைத்து எப்போதும் பெருமை கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment