உலகம் முழுக்க சுமார் 10 கோடி ஸ்மார்ட்போன்களை அதிவேகமாக விற்பனை செய்த நிறுவனம் என்ற பெருமையை ரியல்மி பெற்று இருக்கிறது. 2021 இரண்டாவது காலாண்டில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளரும் பிராண்டாக ரியல்மி இருந்தது. 2021 இரண்டாவது காலாண்டில் ரியல்மி நிறுவனம் 149 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்தது.
“பத்து கோடி யூனிட்கள் எனும் இலக்கை எட்டவும், ஸ்மார்ட்போன் சந்தையில் சிறந்த இடத்தை பிடிக்கவும் எங்களுக்கு ஆதரவளித்த ரியல்மியின் இளம் வாடிக்கையாளர்களுக்கு நன்றி. எங்களின் அடுத்த இலக்கு 2022 வாக்கில் மற்றொரு 10 கோடி யூனிட்களும், 2023 இறுதியில் மேலும் 10 கோடி யூனிட்களையும் விற்பனை செய்வது தான்,” என ரியல்மி நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்கை லி தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1