க்ரீன் டீ குடிக்கவே பிடிக்காதா … இப்படி செஞ்சு பாருங்க … விரும்பி குடிப்பீங்க …
உடல் எடையை குறைக்க கிரீன் டீ பயன்படுத்துதல் என்பது பலரும் அறிந்த விஷயமே. ஆனால் பலருக்கு க்ரீன் டீ பிடிப்பதில்லை. கிரீன் டீ யை சரியாக செய்யாததால் கூட அதன் சுவை பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். எனவே கிரீன் டீயை எப்படி சுவையாக செய்வது என இப்போது பார்ப்போம்
நமது உடல் பராமரிப்பு ஒரு முக்கியமான விஷயமாகும். நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ அதுவே முக்கிய காரணமாக உள்ளது. ஆனால் தற்போதைய நவீன காலங்களில் யாருக்கும் அவர்களின் உடலை பராமரிப்பதற்கான நேரம் இருப்பதில்லை. சொல்ல போனால் இன்னும் சில உணவின் மீது கூட கவனம் செலுத்தாமல் அவர்களின் வேலைகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் நம்மால் பெரிதாக உடலின் மேல் கவனம் செலுத்த முடியாது என்றாலும் சின்னதாக கவனம் செலுத்தலாம்.
கிரீன் டீ
எடையைக் குறைக்க சில உணவுகள் உதவுகின்றன. பல்வேறு கிரீன் டீயும் ஒன்று. ஆனால் பலருக்கு இந்த கிரீன் டீ பிடிப்பதில்லை. பல வருட கிரீன் டீயின் புகழ் அதிகரித்து வருகிறது. மக்கள் தினமும் இரண்டு வேளை கிரீன் டீயை உட்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கிரீன் டீயில் மிக அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இருந்தாலும் அது நல்ல சுவையை தருவதில்லை என பலர் அதை வெறுக்கின்றனர். எடையை குறைக்க நினைப்பவர்கள் கூட இன்றும் கிரீன் டீயை பயன்படுத்தாமல் இருப்பதற்கு இதுவே காரணம். ஆனால் அதற்காக க்ரீன் டீயை தவிர்க்க கூடாது. வேண்டுமானால் அதன் சுவையை மாற்றி அமைக்கலாம். அதற்கான சில எளிய முறைகளை இப்போது பார்க்கலாம்.
மூலிகைகளை சேர்த்தல்
மக்கள் அதிக மூலிகை விரும்பிகள் ஆவர். குறிப்பாக வெளிநாட்டவர்கள் கூட மூலிகை மீது ஆர்வம் காட்டுகின்றனர். அதன் சுவையை விரும்புகின்றனர். க்ரீன் டீ வலுவான கசப்பு சுவையை கொண்டுள்ளது என சிலர் கூறுவதுண்டு. இதில் கசப்பு சுவையை குறைக்க நீங்கள் மூலிகை மசாலா பொருட்களின் உதவியை பெறலாம். இவை இரண்டையும் ஒன்றாக்குவது உங்கள் பானத்தை மேலும் ஆரோக்கியமாக்கும். மேலும் இதனால் கிரீன் டீயின் சுவையும் அதிகரிக்கும்.
தேநீரை ஏன் நாம் அருந்துகிறோம். ஏனெனில் அது நமக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. ஆனால் மூலிகை தேநீர் புத்துணர்ச்சி அளிப்பதோடு உங்கள் மனதிற்கும் ஆன்மாவிற்கும் இதமளிக்கிறது. எனவே கிரீன் டீயில் மூலிகைகளை சேர்ப்பது மூலம் கிரீன் டீ உங்களுக்கு எப்போதும் பிடித்த ஒரு பானமாக மாறலாம்.
நீர் வெப்பநிலை
எதனால் க்ரீன் டீ கசப்பாக மாறுகிறது என தெரியுமா? அதிக வெப்பமுள்ள நீரை க்ரீன் டீ செய்ய பயன்படுத்தினால் அதனால் கிரீன் டீ கசப்பாகும். எனவே நீங்கள் கிரீன் டீ தூளை நீரில் கொட்டுவதற்கு முன்பாக சுடு நீரின் வெப்பநிலையை கவனிக்க வேண்டும். அதே போல நீர் மிகவும் குறைவான சூட்டில் இருந்தாலும் அதனால் பயனில்லை. ஏனெனில் அது இலையில் உள்ள சாறை முழுமையாக இழுக்காது. எனவே அதிகமாகவோ குறைவாகவோ இல்லாமல் மிதமான சூடு உள்ள நீரை கிரீன் டீ செய்ய சரியாக பயன்படுத்தப்படுகிறது.
எனவே 160 முதல் 180 டிகிரிக்குள் தண்ணீர் கிரீன் டீ செய்வதற்கு சிறந்தது. ஒரு வேளை நீரின் வெப்பநிலையை அளக்கும் சாதனம் உங்களிடம் இல்லை எனில் நீரை கொதிக்க வைக்கும்போது பானையின் அடிப்பகுதியில் குமிழ்கள் உருவாகும் சமயத்தில் அடுப்பை அணைத்துவிட்டு கிரீன் டீ தூளை போடவும்.
உயர் தர தேயிலை
நீங்கள் உங்களுக்கு அருகில் உள்ள மளிகை கடையில் ஏதோ ஒரு கிரீன் டீயை வாங்குகிறீர்களா? அப்படியெனில் அதை மாற்றி கொள்ளவும். ஏனெனில் கிரீன் டீயிற்கான தரமான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சரியான கிரீன் டீ தூளை வாங்க வேண்டும். புதிய தெயிலை இலைகள் மற்றும் தளர்வான இலைகள் நல்ல சுவையை தருவதாக அறியப்படுகிறது. எனவே சுவையான கிரீன் டீ உங்களுக்கு வேண்டும் எனில் நீங்கள் சரியான கிரீன் டீ தூளை தேர்வு செய்ய வேண்டும்.
புதினா மற்றும் எலுமிச்சை சாறு
உடல் எடையை குறைக்க உடல் நச்சுத்தன்மையை குறைக்க கிரீன் டீ போதுமானதாக உள்ளது. ஆனால் அதில் புதினா மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்ப்பதன் மூலம் நம்மால் அதன் தரத்தை இன்னும் மேம்படுத்த முடியும். புதினா மற்றும் எலுமிச்சையானது எடை இழப்புக்கு உதவுகிறது. இவை இரண்டையும் ஒன்றாக பயன்படுத்தினால் அது கிரீன் டீயின் சுவையை குறைக்க கூடும். எனவே ஏதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்தவும்.
குளிரூட்டப்பட்ட தேநீர்
இந்த கோடையில் சிலருக்கு சூடான பானங்கள் பிடிப்பதில்லை. அவர்கள் குளிரான பானங்களையே விரும்புகின்றனர். க்ரீன் டீயை சூடாக மட்டுமே உட்கொள்ள முடியும் என பலர் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் அதை குளிராகவும் குடிக்கலாம். முதல் நாள் இரவே கிரீன் டீ செய்து கொள்ளவும். தேவையான பொழுதுகள் அதில் ஐஸ் சேர்த்து குடிக்கலாம்.