24.7 C
Jaffna
December 16, 2024
Pagetamil
சினிமா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிறந்தமேனியாக யோகா செய்யச் சொல்கிறார்களா?

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை இம்முறை ஓடிடியில் நடத்தவிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கவிருக்கிறார். போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுவரை இரண்டு போட்டியாளர்களை உறுதி செய்துவிட்டனர். இந்நிலையில் விவேக் மிஸ்ராவை அணுகியிருக்கிறார்கள்.

நிர்வாண யோகா பயிற்சியாளரும், நடிகரும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான விவேக் மிஸ்ரா கூறியதாவது, பிக் பாஸ் ஓடிடியில் கலந்து கொள்ளுமாறு கேட்டார்கள். நிர்வாண யோகா அல்லது அரை நிர்வாண யோகா செய்ய வேண்டும் என்றார்கள். அதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. நிகழ்ச்சியை காரசாரமாக்க வேண்டும் என்று கேட்டனர் என்றார். விவேக் மேலும் கூறியதாவது, நிகழ்ச்சியை பரபரப்பாக்கும் 5 முன்னாள் போட்டியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார்கள். ஒரு நல்ல நிகழ்ச்சியில் ஏன் நிர்வாண யோகா செய்ய வேண்டும். நான் நிர்வாணமாக யோகா செய்ய வேண்டும் என்றால், எனக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 50 லட்சம் கொடுக்க வேண்டும் என்றேன்.

நான் வளர்ந்து வரும் நடிகரோ, நிர்வாண யோகா மூலம் நிகழ்ச்சியில் வர விரும்பவோ இல்லை. ரியாலிட்டி நிகழ்ச்சி என்பது தொகுப்பாளரை நம்பி மட்டும் இல்லை, போட்டியாளர்கள் தான் அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். போட்டியாளர்கள் நன்றாக இருந்தால் தான் நிகழ்ச்சி வெற்றி பெறும். நான் பிக் பாஸ் ஓடிடியில் பங்கேற்க முடியாது என்று கூறிவிட்டேன் என்றார் விவேக் மிஸ்ரா.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

Pagetamil

Leave a Comment