சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடர் புகழ் ரச்சிதா மகாலட்சுமி பெரிய திரையில் அதுவும் ஹீரோயின் அவதாரம் எடுத்திருக்கிறார். இது குறித்து அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கன்னட படத்தில் ஹீரோயினான ரச்சிதா மகாலட்சுமி குருபிரசாத் ஜோடியாக நடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி.
பெரியதிரையில் மார்க்கெட் டல்லடித்துவிட்டால் நடிகைகள், நடிகர்கள் சின்னத்திரைக்கு வந்தார்கள். இந்நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் பெரிய திரையில் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியோர் பெரிய திரையில் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வினும் பெரியதிரையில் ஹீரோவாகிவிட்டார்.
இந்நிலையில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமியும் ஹீரோயினாகிவிட்டார். அவர் முன்பும் கூட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் ஹீரோயினாக நடிப்பது இதுவே முதல் முறை ஆகும்.
ரச்சிதா மகாலட்சுமி ஹீரோயினாக நடிப்பது தமிழ் படத்தில் அல்ல மாறாக கன்னட படத்தில். குருபிரசாத் இயக்கி, ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். தற்போது ரச்சிதாவும், குருபிரசாத்தும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.
படம் குறித்து குருபிரசாத் கூறிய ஏதாவது,
இது ஒரு பக்க காமெடி படம். ரச்சிதாவுடன் சேர்ந்து நிறைய பேர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் தான் பாக்கி உள்ளது. படப்பிடிப்பை முடித்த உடன் தலைப்பு, நடிகர்கள், நடிகைகளின் விபரங்களை வெளியிடுவேன் என்றார். இந்த படத்தை முடித்துவிட்டு ஜக்கேஷை வைத்து ரங்கநாயகா படத்தை இயக்கவிருக்கிறார் குருபிரசாத்.