இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உடன்பிறப்பே’. இந்தப்படம் அக்டோபர் மாதம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது என அறிவித்துள்ளார் படக்குழுவினர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘உடன்பிறப்பே’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரா.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் தொடங்கப்பட்டது. ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் குறித்த எந்தவொரு தகவலையும் இதுவரை வெளியிடாமல் இருந்தனர் படக்குழுவினர்.
ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரக்கனி இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. ஜோதிகாவின் முந்தைய படமான ‘பொன்மகள் வந்தாள்’ போல இந்த படமும் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள ‘உடன் பிறப்பே’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருக்கும் உடன்பிறப்புகள் வைரவன் மற்றும் மாதங்கி இருவருக்கும் இடையேயான பாச போராட்டத்தை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படம், அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு. ஏற்கனவே ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓடிடியில் வெளியான போது திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.