கொழும்பில் வேகமாக பரவும் டெல்டா!

Date:

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு கொழும்பில் வேகமாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநர் வைத்தியர் சந்திம ஜீவந்தர கூறுகையில், ஜூலை கடைசி வாரத்தில் கொழும்பில் கண்டறியப்பட்ட கோவிட் தொற்றாளர்களில் 75 சதவீதமானவர்கள் டெல்டா வகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஆய்வக சோதனைகளில் கண்டறிந்துள்ளன என்றார். .

ஜூலை முதல் வாரத்தில் வெறும் 13 சதவீதமானவர்களே டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

டெல்டா திரிபு ஆரம்பத்தில் கொழும்பிபு, தெமட்டகொட பகுதியில் மட்டுமே கண்டறியப்பட்டது.

எனினும், பின்னர் கோட்டே, கொலன்னாவ, அங்கொட, நவகமுவ, மஹாபகே, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, இரத்மலானை, பேருவளை, காலி, மாத்தறை, தம்புள்ளை, வவுனியா மற்றும் முல்லைத்தீவில் டெல்டா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸின் டெல்டா வகையின் பரவலானது அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானது என்பதை சுகாதார அமைச்சு பின்னர் ஒப்புக்கொண்டது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்