அஜித்தின் ‘வேற மாறி’ மெசேஜ்
அஜித் நடிக்க வந்து 30 வருடங்களை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் அஜித்தின் சிறப்பு மெசேஜை அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.
தல அஜித் நடிகராகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை அவரின் ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி ட்விட்டரில் டிரெண்டாக்கவிட்டார்கள். மேலும் அஜித்தின் சாதனைகள் பற்றி பேசுகிறார்கள். சமீபத்தில் அஜித்தின் சிறப்பு மெசேஜை அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
அஜித் கூறியிருப்பதாவது,
ரசிகர்கள், ஹேட்டர்கள், நடுநிலையானவர்கள் ஒரே நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களின் அன்பு, ஹேட்டர்களின் வெறுப்பு மற்றும் நடுநிலையானவர்களின் பாரபட்சமில்லா கருத்துகளை ஏற்கிறேன். வாழு, வாழ விடு.
என்றென்றும் அளவில்லா அன்புடன்
அஜித் குமார் என்று கூறினார்.
அஜித்தின் இந்த மெசேஜை பார்த்த ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். இதற்கிடையே வலிமை படத்தின் ஹெச்.டி. புகைப்படங்கள் வேறு வெளியிடப்பட்டுள்ளன. வலிமை படத்தில் வரும் வேற மாறி பாடலின் லிரிக்கல் வீடியோ வேறு மாறி சாதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வலிமை அப்டேட் கேட்டு கெஞ்சிய காலம் போய் அடிக்கடி அப்டேட் வருகிறது. வலிமை படத்தில் வரும் பைக் ஸ்டண்ட் காட்சியை படமாக்க 5 நாட்கள் ஆகுமாம். அந்த 5 நாட்கள் கழித்து ரிலீஸ் தேதியை அறிவிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.