26.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

இறுக்கமான பிரா அணிவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?

பெண்கள் இறுக்கமான பிரா அணிவதனால் பல்வேறுவிதமான உடல்சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. சரியான அளவுகொண்ட பிராவை தேர்வு செய்து அணிவது உடல் தோற்றத்திற்கு மட்டுமன்றி ஆரோக்கியத்திற்கும் பொருத்தமாக அமையும். இறுக்கமான பிராக்களை அணிவது ரத்த ஓட்டத்தை பாதிப்பதோடு, நிணநீர் திசுக்களையும் தாக்கும். இறுக்கமான பிரா அணிவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?

ஆக்சிஜன் பற்றாக்குறை:

இறுக்கமான பிரா அணிவது ஆக்சிஜன் பற்றாக் குறைக்கும் அகற்றும். அதாவது மார்பக பகுதியில் போதுமான அளவு ஆக்சிஜன் உட்செல்ல முடியாமல் தடுக்கப்படும் நிலை உருவாகும். அடிப்பகுதியில் மெல்லிய கம்பிகள், இழப்புகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட பிராக்களை அணியும்போது அவை இறுக்கமாக இருந்தால் பாதிப்பு அதிகமாகும். மார்பக பகுதியில் வடுக்கள் ஏற்படலாம். நுரையீரல் திசுக்கள் சேதமடையவும் கூடும். இவையும் புற்றுநோய் உருவாகுவதற்கான சூழலை அதிகப்படுத்திவிடும்.

சரும சேதம்: மார்பக பகுதியில்
சிவந்து போகுதல், கீறல் போன்ற தழும்புகள் தென்பட்டால் அணியும் பிரா மிகவும் இறுக்கமாக இருப்பதை அறிந்து கொள்ளலாம். இறுக்கமான பிரா மார்பக சருமத்தை பலவிதங்களில் பாதிக்கிறது.

நிணநீர் பாதிப்பு:
இறுக்கமான பிராக்கள் மார்பகத்தின் ஆரோக் கியத்தை பெரிதும் பாதிக்கும். மார்பகங்களில் இருந்து நச்சுகள் மற்றும் பிற கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதுதான் நிணநீரின் இயல்பான செயல்பாடாகும். ஆனால் இறுக்கமான பிராக்கள் நிணநீர் திரவங்களின் ஓட்டத்தை குறைப்பதோடு மார்பகங்களில் நச்சுக்களை உருவாக்கவும் செய்யும். இதனால் மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.

மார்பக அழுத்தம்: இறுக்கமான பிராவை அணிவது மார்பக பகுதியில் தேவையற்ற அழுத்தத்தை கொடுக்கும். அது மார்பக திசு செல்களுக்கு சேதத்தை விளைவிக்கும். அதனால் பிரா தேர்வில் அலட்சியம் கொள்ளக்கூடாது. மார்பகத்திற்கு ஏற்றதாக சரியான அளவில் மட்டுமே அணியவேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment