மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சைக்கோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் வேளைகளில் இறங்கினார் மிஷ்கின். அப்போது நடிகர் விஷாலுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக படத்திலிருந்து விலகினார். இதனை தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்குகி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார் மிஷ்கின். ஆண்ட்ரியாவை பிரதானமாக கொண்டு இந்த படத்தின் திரைகதை அமைக்கப்பட்டுள்ளது. பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. போஸ்டரில் இடம்பெற்ற நடிகை ஆண்ட்ரியாவின் தோற்றம் ஹாலிவுட் பாணியில் ஒரு பேய் படம் என்பதை போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
போஸ்டரில் குளியல் தொட்டியில் ரத்தம் படிந்த கால்களோடு ஆண்ட்ரியா முகம் தெரியாமல் தலைகீழாக கவிழ்ந்து படுத்து கொண்டு கையில் சிகரெட்டை பிடித்திருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என்றும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர் படக்குழுவினர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதியிலே நிறுத்தப்பட்ட பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கலில் உள்ள மீனாட்சிநாயக்கம்பட்டியில் மீண்டும் துவங்கியுள்ளது. பிசாசு 2 படத்தில் அண்மையில் நமீதா கிருஷ்ணமூர்த்தி இணைந்ததாக தகவல்கள் வெளியாகின. . மேலும் இந்த படத்தில்
விஜய் சேதுபதி பேய் ஓட்டுபவர் ரோலில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது வெளியாகியுள பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.