133 ஆண்டுகள் பழமையான அரசுப் பள்ளியை தத்தெடுத்த சுதீப் – குவியும் பாராட்டுக்கள் அரசுப் பள்ளியை தத்தெடுத்துள்ள சுதீப், அந்த பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க இருக்கிறார்.
தமிழில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’, விஜய்யின் ‘புலி’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் சுதீப். கன்னடத்தில் முன்னணி நடிகரான இவர், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான ஷிவ்மோகாவில் ஒரு அரசுப் பள்ளியை தத்தெடுத்துள்ளார் சுதீப்.
133 ஆண்டுகள் பழமையான இந்தப் பள்ளியின் சுவர்கள் பழுதடைந்து உள்ளன. மாணவர்களுக்கு தேவையான வசதிகளும் இல்லை என்பதை அறிந்த சுதீப், இந்த பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க இருக்கிறார். கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக அவரை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.