கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டுச் சந்தி பகுதியில்இன்று காலை (04) கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த உந்துருளி வேககட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே உள்ள பெயர் பலகையில் மோதுண்டதில் ஒரு படுகாயமடைந்துள்ளார்.
ஏ9 வீதியில் தெற்கு நோக்கி பயணித்த உந்துருளி புதுக்காட்டுச் சந்தியில்
வேககட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த அறிவித்தல்
பெயர் பலகையின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. இதன் போது
உந்துருளியை செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர்
காவு வண்டி மூலம் பளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1