தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சு, பொலிஸ்மா அதிபரை கேட்டுக் கொண்டுள்ளது.
பொலிஸ் மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில், இன்று முதல் நாடளாவிய ரீதியில் சோதனைகளை நடத்துமாறு கோரியுள்ளது.
இருக்கை திறனுக்கு மேல் ஆட்களை ஏற்றிச் செல்லும் அனைத்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் சோதனை நடத்துமாறு அந்த கடிதத்தில் குறப்பிடப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களில் ஏராளமானவர்கள் தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதாக புகார்கள் வந்ததை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1