பிரபல பாலிவுட் நடிகைக்கு தயிர் இட்லிதான் பிடிக்குமாம்…

Date:

ஏராளமான பிரபலங்கள் தங்கள் உடல் எடையை குறைக்க விதவிதமான உடற்பயிற்சிகளை செய்து வரும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நம்முடைய பராம்பரிய உணவான வெறும் இட்லி, பருப்பு மற்றும் தயிர் கொண்டு தன்னுடைய உடல் எடையை குறைத்து உள்ளார். இதுகுறித்து அவர் சில பிட்னஸ் ரகசியங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். சமீபத்திய அவருடைய புகைப்படத்தை பார்த்தால் அசந்து விடுவீர்கள். அந்தளவுக்கு தன்னுடைய 36 வயதிலும் மெழுகுச் சிலை போல் வடிவம் பெற்றுள்ளார். அவருடைய சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் வெளியிட்டு ஏராளமான லைக்குகளை வாங்கி உள்ளார். இது குறித்து அவர் சில உணவு ரகசியங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

பாலிவுட் சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடிகை கத்ரீனா கைஃப் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமையால் மட்டுமல்ல அவரின் அழகாலும் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர். பொதுவாக கத்ரீனா கைஃப் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைக்க சில யுக்திகளை கையாண்டு வருபவர். அதனால் தான் அவர் இன்னும் கச்சிதமான இடையுடன் ஜொலித்து வருகிறார். அதே நேரத்தில் அவர் எந்தவித ஆடம்பர உணவுகளை நாடாதவர். அவர் நம்முடைய எளிய பராம்பரிய உணவுகளை மட்டுமே பின்பற்றி வருகிறார். இட்லி, பருப்பு, காய்கறிகள் கொஞ்சம் உடற்பயிற்சி, நல்ல தூக்கம் போன்ற பழக்கங்கள் தான் கத்ரீனாவின் ரகசியம்.

​கத்ரீனாவின் பிட்னஸ் ரகசியங்கள்

காலை உணவு : அவரின் காலை உணவு பெரும்பாலும் 3 சட்னி வகைகளை அடிப்படையாக கொண்டு இருக்கும். முருங்கைக்கீரை சட்னி, தக்காளி பீட்ரூட் சட்னி, வெறும் தேங்காய் சட்னி போன்றவை ஆகும். சில நேரங்களில் கத்ரீனாவிற்கு சாம்பார் அல்லது ரசம் கூட பிடிக்குமாம்.

​கத்ரீனா டயட் ரகசியம்

அவர் தன்னுடைய உணவில் பெரும்பாலும் இட்லி மற்றும் தயிர் எடுத்துக் கொள்கிறார். மேலும் அவர் இட்லி மாவில் தயிர் சேர்த்து சுடுவது இட்லியை பஞ்சு போன்றதாக மாற்றுகிறது என்று எளிய டிப்ஸ்களையும் வழங்கியுள்ளார். நான் எனது இட்லி மாவை புளிக்க வைக்க தயிர் சேர்க்கிறேன் என்றும் கூறியுள்ளார். தயிர் உண்மையில் உங்களுக்கு சத்தான ஒன்று. அதை மாவில் சேர்க்கும் போது அது உங்களுக்கு கூடுதல் சத்துக்களை வழங்குகிறது. இட்லியும் மல்லிகைப் பூ போன்று பஞ்சு மாதிரி இருக்கும்.

தயிர் சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

தயிர் மற்றும் பருப்பு இரண்டும் புரோபயாடிக் உணவுகள் ஆகும். இது உங்க ஜீரண சக்திக்கு உதவுகிறது. அதே நேரத்தில் உடல் எடையை குறைக்கவும் உதவி செய்கிறது. பால் பொருட்களும் விட்டமின்கள் தாதுக்கள் அடங்கிய உணவாகும். பால் பொருட்களில் இயற்கையாகவே கால்சியம், புரோட்டீன்கள், விட்டமின் டி, மக்னீசியம், இரும்புச் சத்து மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இதை நீங்கள் அரிசி சாதத்துடன் எடுத்துக் கொள்ளும் போது தயிர் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது என கத்ரீனா கைஃப் தன்னுடைய பிட்னஸ் ரகசியம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்