படல்கும்பர, பரயியன் அருவியை பார்வையிட்ட சகோதரனும், சகோதரியும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
30 வயதான இளைஞனும், 23 வயதான யுவதியுமே உயிரிழந்தனர்.
ஒக்காம்பிட்டிய பகுதியை சேர்ந்த இவர்கள், படல்கும்பர பகுதியில் அருவியை பார்த்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.
நீர் வீழ்ச்சியை பார்வையிட்ட போது யுவதி கால் இடறி கீழே வீழ்ந்துள்ளார். யுவதியை மீட்பதற்காக அண்ணன் நீரில் பாய்ந்தார். இருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த இளைஞனிற்கு எதிர்வரும் 18ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்தது. உயிரிழந்த யுவதி எதிர்வரும் 15ஆம் திகதி பதுளை தாதியர் பயிற்சிக் கல்லூரிில் இணையவிருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1