மகரம், கும்பம், மீனம் ராசிக்கான வார ராசிபலன் (ஆகஸ்ட் 2 முதல் 8 ம் தேதி வரை)
மகரம் வார ராசிபலன் –
உத்திராடம்- 2,3,4 பாதங்கள்
எடுத்த செயலில் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவை. மனதில் புத்துணர்ச்சி, உற்சாகம் இருக்கும். கஷ்டப்படுத்தி வந்த உடல் நல பிரச்சனை தீரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்தி வந்து சேரும்.
திருவோணம்
அன்புக்குரியவரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சலும், அசதியும் ஏற்படும். உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் உதவி புரிவர். உங்கள் வேலையில் லாபம் அதிகரிக்கும். யாரிடமும் எச்சரிக்கையுடன் பேசவும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
பண வரவு சிறப்பாக இருக்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் சிறக்கும். சுற்றுலா செல்வதால் மன மகிழ்ச்சி பெருகும். தேவையற்ற வீண் செலவு காரணமாக ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். இழப்பைத் தவிர்க்கலாம்.
கும்பம் வார ராசிபலன்
(அவிட்டம்-3,4 பாதங்கள்– சதயம் -1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி -1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் எந்த ஒரு வாக்குவாதத்தையும் தவிர்க்கவும். உங்களின் நற்குணங்களால் பாராட்டப்படுவீர்கள். வீண் செலவை குறைத்துக் கொண்டு சேமிப்பை அதிகரிக்கவும்.
சதயம்
ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. மனதில் பக்தி அதிகரிக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் எந்த காரணத்துக்கும் கொடுக்க வேண்டாம். திரும்பி வராது. குடும்பத்தில் ஆதரவு சிறப்பாக இருக்கும்.
பூரட்டாதி -1,2,3 பாதங்கள்
ஆன்மிக பயணம் செல்ல வாய்ப்புள்ளது. உங்கள் ஆசைகள், விருப்பங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது. மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பெண்களுக்கு சிறந்த வாரம். பொருளாதார உயர்வினால் மகிழ்ச்சி பொங்கும்.
மீனம் வார ராசிபலன்
(பூரட்டாதி- 4 ஆம் பாதம், உத்திரட்டாதி -1,2.3.4 பாதங்கள், ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
சிலருக்கு பெரிய இடத்திலிருந்து உங்களுக்கு துணை அமையும் கடின உழைப்பால் சிறப்பான வெற்றியை பெறுவீர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு நிதி நிலை சிறப்பாக அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
உத்திரட்டாதி
தாராள பண வரவு இருக்கும். அதே போல செலவும் ஏற்படுவதால் செலவில் கவனம் தேவை. புத்திர பாக்கியம் ஏற்படுகிறது. மேலதிகாரிகளின் தயவு ஏற்படுகிறது. கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தொழி. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
ரேவதி
சிலருக்கு திடீர் பயணங்கள் ஏற்படும். அதனால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பதவி உயர்வு ஏற்படும். தொழிலில் உற்பத்தி பாதிக்கப்படலாம். விவசாயத்தில் வசூல் அதிகரிக்கும். பணி புரியும் பெண்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உடல் ஆரோக்கியம் பாதிப்பு ஏற்படலாம்.