25.4 C
Jaffna
March 5, 2025
Pagetamil
ஆன்மிகம்

துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான வார ராசிபலன்

துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான வார ராசிபலன் (ஆகஸ்ட் 2 முதல் 8 ம் தேதி வரை)

துலாம் வார ராசிபலன்

(சித்திரை -3,4 பாதங்கள், சுவாதி- 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

துலாம் ராசிக்கு ஆகஸ்ட் 2,3 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலை செய்வதிலும் கவனம் தேவை. மற்றபடி நீங்கள் அடைய இருக்கும் நற்பலனைப் பார்ப்போம்.

சித்திரை -3,4 பாதங்கள்

சுப நிகழ்வு, விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். உங்கள் தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசு மூலம் அனுகூலம் கிடைக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும்.

சுவாதி

கல்வியில் மேன்மை பெறுவீர்கள். திடீர் பணவரவு, பயணங்கள் ஏற்படும். உங்கள் செயலில் திறம்படச் செய்து இலக்கை அடைவீர்கள். பெண்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

விசாகம்-1,2,3 பாதங்கள்

பயணங்கள் மூலம் நற்பலனை அடைவீர்கள். மாணவர்கள் கவனமுடன் படிப்பது அவசியம். ஆன்மிக ஆர்வம், மகான்களின் ஆசி கிடைக்கும். திருமண ஆகாதவர்கள் நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.

விருச்சிகம் வார ராசிபலன்

(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள்)

விருச்சிக ராசிக்கு ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலை செய்வதிலும் கவனம் தேவை. மற்றபடி நீங்கள் அடைய இருக்கும் நற்பலனைப் பார்ப்போம்.

விசாகம்- 4 ஆம் பாதம்

வீட்டில் சந்தோஷம் பெருகும். துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அமைதி, பொறுமை தேவை. போட்டித் தேர்வில் வெற்றி எதிர்பார்க்கலாம்.

அனுஷம்

பண வரவும், மகிழ்ச்சியும் குறையிருக்காது. சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். சுப நிகழ்வுகள் நடக்கும். பணிச்சுமை இருந்தாலும் கடின உழைப்பால் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

கேட்டை

எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். நிலம், வீடு வாங்க வாய்ப்பு உள்ளது. சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். தொழிலில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். உங்கள் செயலை எதிர்பார்த்த வேகத்தில் செய்து முடிப்பது சிரமம்.

தனுசு வார ராசிபலன்

(மூலம் -1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

தனுசு ராசிக்கு ஆகஸ்ட் 6, 7 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. மற்றபடி நீங்கள் அடைய இருக்கும் நற்பலனைப் பார்ப்போம்.

மூலம் நட்சத்திரம்

இந்த வாரம் எந்த ஒரு செயலிலும் அலைச்சல் அதிகமாக இருக்கும். உற்றார் உறவினருடன் அனுசரித்துச் செல்லவும். எடுத்த செயலை முடிக்க கடின உழைப்பு.

பூராடம் நட்சத்திரம்

சிலருக்கு வீண் செலவும், வீண் அலைச்சலும் ஏற்படும். அதிகாரிகளிடம் விவாதம் வேண்டாம். கடினமான முயற்சிக்கு பின்னரே உங்கள் வேலையில் முன்னேற்றம் இருக்கும். கடினமான வேலையை தன்னிகையுடன் செய்யுங்கள்.

உத்திராடம் –1 ஆம் பாதம்

பணவரவு திருப்திகரமாக இருக்கும். எனினும் பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். புத்திர பாக்கியத்தை எதிர்ப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். யாருடனும் விவாதம் வேண்டாம். உங்கள் தடித்த வார்த்தைகளால் நண்பர்களும் பகைவர்களாவர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய ராசி பலன்கள் – 28.02.2025 – வெள்ளிக்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 27.02.2025 – வியாழக்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 26.02.2025 – புதன்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 25.02.2025 – செவ்வாய்க்கிழமை

Pagetamil

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் – 24.02.2025

Pagetamil

Leave a Comment