வவுனியாவில் 10 சிறைச்சாலை கைதிகள் உட்பட 41 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!

Date:

வவுனியாவில் 10 சிறைச்சாலை கைதிகள் உட்பட 41 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (02.08) இரவு வெளியாகின.

அதில், நேரியகுளம் பகுதியில் பதினைந்து பேருக்கும், சலனிகம பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், விநாயகபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஈரப்பெரியகுளம் பகுதியில் மூவருக்கும், புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சாம்பல் தோட்டம் பகுதியில் ஒருவருக்கும், பாரதிபுரம் பகுதியில் ஒருவருக்கும், மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், புதிய கற்பகபுரம் பகுதியில் ஒருவருக்கும், மருதமடு பகுதியில் ஒருவருக்கும், மாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், முதலியார்குளம் பகுதியில் ஒருவருக்கும், வைத்தியசாலை விடுதியில் ஒருவருக்கும், உடையார்கட்டு தெற்கு பகுதியில் இருவருக்கும், பட்டக்காடு பகுதியில் மூன்று பேருக்கும், சிறைச்சாலை கைதி ஒருவருக்கும், இராசேந்திரங்குளம் ஒருவருக்கும், ஒமேக்கா ஆடைத் தொழிற்சாலையில் இருவருக்கும், மாகா நிறுவனத்தைச் சேர்ந்த இருவருக்கும் என 41 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 10 பேர் வவுனியா சிறைச்சாலை கைதிகளாக உள்ளனர். அத்துடன் தமக்கான நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் தாமாக முன்வந்து பிசீஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்