லிங்குசாமி படத்தில் அஜித், விஜய் பட நடிகை ஒப்பந்தம்

Date:

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது.

தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இதையடுத்து ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்த இவர், தற்போது ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் நடிகர் ஆதி வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடிக்க அக்‌ஷரா கவுடா ஒப்பந்தம் ஆகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் தமிழில், அஜித்துடன் ஆரம்பம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜெயம் ரவி உடன் போகன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்