‘ஆகாஷ் வாணி’ வெப் தொடரில் பிக்பாஸ் பிரபலம்..

Date:

 

கொரோனா, லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் ஓ.டி.டிகளுக்கும், இணைய தொடர்களுக்கும் மவுசு கூடி வருகிறது. திரையுலக பிரபலங்களும் இணைய தொடர் எனப்படும் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் Kaustubha Mediaworks சார்பில் தயாராகும் புதிய வெப் சீரிஸில் நடிக்க உள்ளார். இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக ரெபா ஜான் நடிக்கிறார்.

தமிழ் திரை வரலாற்றில் தற்போதைய காலகட்டம், இணைய தொடர்களின் பொற்காலமாக ஜொலித்து வருகிறது. பெரும் தயாரிப்பு நிறுவனங்கள், பெரும் ஆளுமைகள் இணைவில், பிரமாண்ட உருவாக்கத்தில் உருவாகும் இணைய தொடர்கள், ஒன்றன் பின் ஒன்றாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில், ரசிகர்களை கொள்ளை கொள்ளும் படைப்பாக, ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற திரைப்படங்களில் இயக்குனர் அட்லீயிடம் உதவியாளாராக பணியாற்றிய Enoc Able, புத்தம் புதிய ரொமான்ஸ் இணைய தொடர் ‘ஆகாஷ் வாணி’ யை இயக்கவுள்ளார்.
இந்த இணைய தொடரை அனுபவமிக்க இளம் திறமையாளர்களை ஒன்றிணைத்து, “ஆகாஷ் வாணி” என்ற பெயரில் தயாரிக்கிறது Kaustubha Mediaworks. பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் ‘ஆகாஷ்’ பாத்திரத்திலும், ஆல்பம் பாடலான ‘குட்டி பட்டாஸ்’ மூலம் கவனத்தை ஈர்த்த, ரெபா ஜான் ‘வாணி’ பாத்திரத்திலும் நடிக்கிறார்கள். அண்மையில் வெளியான தனுஷின் “ஜகமே தந்திரம்” படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சரத் ரவி, தீபக் பரமேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் வின்சா, அபிதா வெங்கட் ராமன், மேகி என்று அழைக்கப்படும் மார்கரெட், மெல்வின், ஜான்சன், கவிதாலயா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்க உள்ளனர்.

ஆகாஷ் வாணி குறித்து இயக்குனர் Enoc Able கூறும்போது,“இத்தொடர் காதலை, காதல் உறவின் பிரச்சனைகளை பற்றி உணர்வுப்பூர்வமாக கூறும் ஒரு அழகான திரைக்கதை. இது பார்வையாளர்களை எளிதில், உணர்வுபூர்வமாக ஈர்க்கும் படியான படைப்பாக இருக்கும். எளிமையான மற்றும் யதார்த்தமான உரையாடல்கள் ஆன்மாவை ஈர்க்கும் இசை, கண்களை கவரும் ஒளிப்பதிவு, கச்சிதமாக பொருந்தும் இளம் நடிகர்கள் குழு, ஆகிய அனைத்தும் “ஆகாஷ் வாணி” தொடரை மிக அற்புதமான படைப்பாக மாற்றும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தொடர் குறித்து Kaustubha Mediaworks சார்பில் சோனியா ராம்தாஸ் கூறும்போது, அனுபவம் வாய்ந்த எழுத்தாளர் திரு ரமணன் அவர்களின் கதை, இளம் திறமையாளர் இயக்குனர் Enoc Able இயக்கம், சிறந்த நடிகர்கள் மற்றும் அட்டகாசமான தொழில் நுட்ப குழுவினர் இணைந்து, இரண்டு அழகான ஆத்மாக்களின் அளவுமீறிய அன்பின் கதையை, காதலை, அற்புதமான படைப்பாக தரவுள்ளார்கள். பார்வையாளர்கள் மனதை நிச்சயமாக இந்தக்காதல் கதை கவரும் என உறுதியாக நம்புகிறோம் என கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்