உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

Date:

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலை குறைந்த பின்பு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார். கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. அப்போது விஜய் சம்பந்தமான காட்சிகளும், பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்பை முடித்துவிட்டு கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்த நடிகர் விஜய், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி உள்ளார். அதன்படி தற்போது பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தின் போஸ்ட்ர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியானது. இணையத்தை கலக்கிய இந்த போஸ்டர்கள் டிரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தன. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து வெளியாகியுள்ள அப்டேட் விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்