உடல் எடையை குறைக்க பலரும் படாதபாடு பட்டு வருகிறது. எவ்வளவு தான் முயற்சித்தாலும் உடல் எடையை குறைப்பது மிகவும் சவாலான ஒன்றுதான். இறப்பு அதிவேகமாக உடல் எடையை குறைக்க சில மூலிகைகள் உதவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் சிலவற்றை பார்க்கலாம்.
இஞ்சி:
இஞ்சியில் சளித்தொல்லை, இருமல், செரிமானம் இன்மை, எதிர்ப்புசக்தி அதிகரித்தல் உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன. அதிகாலை எழுந்தவுடன் இஞ்சி டீ குடிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
ஜின்செங் வேர்:
கொரியா, சீனாவில் அதிகம் பயன்படுத்தும் வேர். இது மெட்டபாலிசத்தை அதிக உடல் சர்க்கரை அளவை சமமாக வைக்க உதவுகிறது. இந்த வேரை சூப், டீ, சாலட்களை சேர்த்து சாப்பிட உடல் எடை குறைய உதவுகிறது.
பூண்டு:
அதிக கலோரிகளை குறைக்க, பூண்டு பயன்படுத்த. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. தினமும் 2 அல்லது 3 பூண்டை காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் சாப்பிட்டு வர உடல் எடையில் ஏற்படும் மாற்றத்தை நன்றாக உணர்வீர்கள்.
ஆர்கனோ:
பீட்சா, பாஸ்தா உள்ளிட்ட பொருட்களில் ஆர்கனோ பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், இது போன்ற ஜங் உணவுகளை சாப்பிட முடியாது. ஆனால் ஆர்கனோ உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பது பலருக்கு தெரியாது. தொப்பையில் உள்ள அதிக கொழுப்புகளை குறைக்க ஆர்கனோ பெரிதும் உதவுகிறது.