சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்று (02) முதல் அனைத்து ஊழியர்களும் வழமை போன்று கடைமைகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறிக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவல் கட்டுப்பாட்டு நோக்கில், அரச பணியாளர்களை சுழற்சி முறையிலும், வரையறைக்கு உட்பட்ட எண்ணிக்கையிலும் அழைத்து பணிகளை செய்விக்கும் வகையில் விடுக்கப்பட்ட சுற்றுநிருபங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
சுற்றறிக்கையின்படி கல்வி, கல்வி சாரா ஊழியர்கள், மாகாண மற்றும் வலய கல்வி அலுவலகங்களின் அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய சுற்றுநிருபம் கீழே உள்ளது.








