Pagetamil
மருத்துவம்

இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள் …..

ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள் ….

நீரிழிவு ஒரு உலக பொது நோயாக உள்ளது. உலக மக்கள் பலரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சர்க்கரை அல்லது குளுக்கோஸ் அளவானது இரத்தத்தில் அதிகமாகும் போது நீரிழிவு ஏற்படுகிறது. அதிகப்பட்சம் நாம் உண்ணக்கூடிய உணவு பழக்கமே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்ளும்போது அது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது என பலர் நினைக்கிறார்கள்.உணவு உண்பது மட்டுமே நீரிழிவு நோய்க்கான ஒரே காரணமாக இருப்பதில்லை. மன அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு மற்றும் உட்கார்ந்தே இருக்க கூடிய வாழ்க்கை முறை ஆகியவையும் நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணமாக உள்ளது. நீரிழிவு நோய் என்பது குணப்படுத்த முடியாதது என பலர் நினைக்கின்றனர். இது தவறான கூற்றாகும். நீரிழிவு உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படுகிறது. ஆனால் உடலில் சர்க்கரை சரியான அளவில் இல்லாமல் குறைவாக இருந்தாலும் அது உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

எனவே சர்க்கரை அளவை நிர்வகிப்பதன் மூலம் நீரிழிவை சரி செய்ய முடியும். அதற்கு உதவும் சில மூலிகைகளையும் ஆரோக்கிய ஆரோக்கியங்களையும் இப்போது பார்க்கலாம்.

நித்திய கல்யாணி

நித்திய கல்யாணி முக்கியமான மருத்துவ தாவரமாகும். இந்த பசுமையான தாவரத்தின் இலைகள் இரண்டாம் வகை நீரிழிவிற்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. மலேரியா, தொண்டை புண் போன்ற பிற சுகாதார பிரச்சனைகளுக்கான பயன்பாட்டிற்கு இது பயன்படுகிறது

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க நித்திய கல்யாணியின் இரண்டு இலைகளை எடுத்து அப்படியே சாப்பிடலாம். அல்லது ஒரு கப் தண்ணீரில் இந்த இலையை கொதிக்க வைத்து அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.

சிறுகுறிஞ்சான்

சிறுகுறிஞ்சான் செடியில் ஃபிளவனோல்ஸ் மற்றும் ஆரோக்கிய நன்மை அளிக்க கூடிய பல கலவைகள் உள்ளன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் இது பயனுள்ள மூலிகையாக உள்ளது. சிறுகுறிஞ்சான் ஒரு ஆயுர்வேத மூலிகையாகும். இது ஒவ்வாமை, இருமல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பல்வேறு உடல் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

உணவை உட்கொள்வதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு டீஸ்பூன் சிறுகுறிஞ்சான் இலை பவுடரை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment