நடு வீதியில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்கள் கைது!

Date:

பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய மூவரை போலீசார் கைதுசெய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பேருந்து நிலையத்தில், கடந்த வெள்ளிக் கிழமை இரவு சாலையில் நடுவே இருசக்கர வாகனத்தை நிறுத்தி, 4 இளைஞர்கள் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர். போக்குவரத்துக்கு இடையூறாக அவர்கள் கேக் வெட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியதால் பெரம்பலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து, அரும்பாவூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். அப்போது, வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(24) என்பவர், தனது பிறந்த நாளையொட்டி அதே பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன்(20), பிரபாகரன் மற்றும் தொண்டப்பாடியை சேர்ந்த சூர்யா ஆகியோருடன் சாலையில் பட்டா கத்தியால் கேக் வெட்டியது தெரிய வந்தது.

இதனை அடுத்து, 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த அரும்பாவூர் போலீசார், ஹரிகிருஷ்ணன்(24), ஜனார்த்தனன் (20), சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.

தப்பியோடிய பிரபாகரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்