மந்திரீகம் செய்வதாக கூறி, வீட்டிலிருந்து ஆண்களை முச்சந்திக்கு அனுப்பி வைத்துவிட்டு, பெண்ணையும் யுவதியையும் ஓர் அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஹாலிஎல போகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
45 வயதான பெண்ணும் 19 வயதான யுவதியுமே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை காலை ஹாலி-எலவில் உள்ள லாந்தேவெலவில் உள்ள ஒரு வீட்டில் சடங்கைச் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென, 2 பெண்களையும் பிடித்திருப்பது ஆண்களில் வெறுப்புள்ள பேய், அது வெளியேறும் போது ஆண்கள் நிற்கக்கூடாதென கூறி, அனைத்து ஆண்களையும் வீட்டை விட்டு வெளியேற சொன்னார்.
அருகிலுள்ள முச்சந்தியை கடந்து வீட்டுப் பக்கம் வரக்கூடாதெனவும், மீண்டும் தான் கூப்பிடும் போதே திரும்பி வர வேண்டுமென்றும் கூறி, பெண்களை மட்டும் விட்டுவிட்டு ஆண்களை அனுப்பியுள்ளார்.
பூசாரியின் கதையை நம்பிய ஆண்கள் வீட்டை விட்டு சென்றுவிட்டனர்.
அதன்பின்னர், பேயோட்டுவதாகக் கூறி, அந்தப் பெண்ணையும் யுவதியையும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர், மெதிரிகிரியவைச் சேர்ந்த 41 வயதானவர். அவர் இன்று பதுளை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
(மேலே இணைக்கப்பட்டது சித்தரிப்பு படம்)




