Pagetamil
லைவ் ஸ்டைல்

உங்கள் பெயர் A இல் ஆரம்பிக்கின்றதா…..

 

எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல உங்கள் பெயருக்கான பலனும் ஏற்படுகிறது. அந்த வகையில் தமிழில் அ, ஆ போன்ற பெயர்கள் ‘A’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும். அப்படி A என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் கொண்டவர்களுக்கு எப்படிப்பட்ட அதிர்ஷ்டம் ஏற்படும் என்பதை விரிவாக பார்ப்போம்.

A என்ற எழுத்து பொதுவாக நாம் பார்க்க கோபுரம் அல்லது பிரமிடு போன்று காட்சி தருவதை உணரலாம். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டதோடு, வாழ்க்கையில் ஒரு குறிக்கோளைக் கொண்டவராகவும், அதை அடைய உழைப்பவராகவும் இருப்பார்கள்.
ஒரு விதிமுறையை வகித்துக் கொண்டு தான் எதை அடைய வேண்டும் என்று நினைக்கின்றார்களோ அதை நோக்கி ஓடுவார்கள். அதை அடையும் வரை எந்த ஒரு கவன சிதறலும் பெரும்பாலும் இருக்காது.

இவர்களில் பெரும்பாலானோர் எந்த ஒரு ஆலோசனை அல்லது விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர்களாக உணரும் போது தான் அதை மற்றிக் கொள்ள நினைப்பார்கள். அல்லது ஆலோசனையைக் கேட்பார்கள்.
அதுமட்டுமல்லாமல் தங்களின் திறமையை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்றும், எந்த ஒரு இடத்திலும் தான் முன்னிலை வகிக்க வேண்டும் என நினைப்பார்கள். மரியாதையை அதிகம் விரும்புவார்கள். ஒரு நபருக்கு A என்ற எழுத்தில் பெயர் வைப்பது மட்டுமல்லாமல், ஒரு நிறுவனத்திற்கு A என்ற எழுத்தில் பெயர் வைத்தால் நல்ல வெற்றியும், முன்னேற்றத்தையும் தரக்கூடியதாக இருக்கும்.

​ஆளுமையுடன் இருக்கும் ஆண்கள்
A என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் வைத்திருக்கும் ஆண்கள் நல்ல ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை ஆளக்கூடிய, அதிகாரம் செலுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். உதாரணமாக அசோகர், அலெக்ஸாண்டர், ஆபிரகாம் லிங்கன், அடால்ஃப் ஹிட்லர் போன்றவர்களை சொல்லலாம்.

செயல்பாடு எப்படி இருக்கும்?
எந்த ஒரு வேலை அல்லது தொழில் செய்பவர்களாக இருந்தாலும் அதில் ஈடுபாடுடன், நேர்மையாக, அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுவார்கள். எழுத்துக்களில் முதலாவதாக இருப்பது போல வெற்றியிலும் முதலிடத்தில் இருப்பார்கள்.

பெண்களுக்கு சிறப்பான பலன்..
பெரும்பாலான பெண்கள் A என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் வைத்திருப்பார்கள். அதிலும் அவர்களின் பெயரில் A என்ற எழுத்து திரும்ப திரும்ப வருவதாக இருக்கும்.
உதாரணமாக ; அர்ச்சனா, அம்பிகா, அனன்யா என பெயரின் தொடக்கம், நடுவில், இறுதியில் அதிகம் A இடம்பெற்றிருக்கும். இப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்வில் இன்பமும், மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளாலும் நிறைந்திருக்கும். வாழ்வில் இலக்கை அடையக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

சமூகத்தில் எப்படி இருப்பார்கள் ?
சமூகத்தில் மதிப்புடன், அதிக நண்பர்கள் கொண்டிருந்தாலும், சில நண்பர்களிடம் மட்டும் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். அவர்களுக்கு ஒத்துப் போகும் நபர்களிடமே அதிகம் பழகுவார்கள்.

இவர்கள் ஆலோசனையை கேட்பது அரிது தான் இருந்தாலும் இவர்கள் எடுக்கும் முடிவு இவர்களுக்கு மட்டுமல்லாமல், இவர்களை சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மை தரக்கூடியதாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து நிதானித்துச் செய்யக்கூடிய இவர்கள் ஒரு தெளிவான பார்வையுடன் அணுகுவார்கள்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment