Pagetamil
லைவ் ஸ்டைல்

பிறப்புறுப்பில் ஏற்படும் பாக்டீரியா வஜினோசிஸ் பிரச்சனையை…..

பிறப்புறுப்பில் ஏற்படும் பாக்டீரியா வஜினோசிஸ் பிரச்சனையை…..

பெண்களுக்கு எப்போதும் பிறப்புறுப்பை பராமரிப்பது என்பது மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கும். பொதுவாக பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் பொதுவான பிரச்சனை பாக்டீரியா வஜினோசிஸ் தான். இது பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள நல்ல பாக்டீரியாவை குறைத்து, கெட்ட பாக்டீரியவான வஜினோசிஸை அதிகரிக்கும். இதன் மூலம் பிறப்புறுப்பின் பிஎச் அளவு பாதிக்கப்படும்.

பிறப்புறுப்பு பகுதியில் வஜினோசிஸ் பாக்டீரியா இருந்தால், பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல், நமைச்சல், சிவந்து போதல், வீக்கமடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதோடு பிஎச் அளவின் சமநிலை சீர்குலையும் போது உடனே அதற்குரிய சிகிச்சை பெற வேண்டும். இல்லையெனில், மலட்டுத்தன்மை உட்பட பல சிக்கல்கள் ஏற்படும்.

நீங்கள் உண்ணும் உணவுகள் கூட உங்களின் பிறப்புறுப்பு ஆரோக்கியத்துக்கு முக்கியமானது. நீங்கள் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் கூட உங்களின் பிறப்புறுப்பு ஆரோக்கியத்தை பாதிக்கும். அதேபோல் சில உணவுகள் உங்கள் பிறப்புறுப்பின் பிஎச் அளவை சமநிலைப்படுத்த உதவுவதோடு, நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதோடு அந்த உணவுகள் பாக்டீரியா வஜினோசிஸை குணப்படுத்தும். அப்படிப்பட்ட சில உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கெபிர் ஒரு ஆரோக்கியமான மற்றும் புளித்த உணவாகும். இது நாம் உண்ணும் தயிரைப் போன்றது. இது பாக்டீரியா வஜினோசிஸை குணப்படுத்தி, பிறப்புறுப்புக்கு நன்மை பயக்கும். ஏனெனில், கெபிரில் அதிக அளவு லேக்டோபேசில்லஸ் உள்ளன. லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்வதில் லேக்டோபேசில்லஸ் பெரும் பங்கு வகிக்கிறது. இது பாக்டீரியாவின் சமநிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதகிறது.

சமையலறையில் எப்போதும் இருக்கும் மூலிகையான பூண்டு பெண்களுக்கு பல நன்மைகளைத் தரும். பூண்டில் உள்ள லுகோசைட், பெண்களின் பிறப்புறுப்புக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பையும் வழங்குகிறது. பூண்டு ஒரு ப்ரி பயாடிக் உணவு. இது பாக்டீரியா வஜினோசிஸை குறைக்க உதவும். குறிப்பாக, ப்ரீபயாடிக் உணவுகள் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதோடு பிறப்புறுப்பின் பிஎச் அளவையும், அதன் சமநிலையையும் உறுதிப்படுத்தும். பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நோய்த் தொற்றுகளுக்கு எதிராக போராட உதவும்.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களில் பல்வேறு நன்மைகள் நிரம்பியுள்ளன. சிட்ரஸ் பழங்கள் மீண்டும் மீண்டும் வரும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராக செயல்படுகின்றன. இதுகுறித்து, ஜர்னல் ஆப் கிளினிக்கல் மெடிசன் ரிசர்ச் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வின்படி, சிட்ரஸ் பழங்களில் அஸ்கார்பிக் அமிலம் இருப்பதால் அதனை தவறாமல் உட்கொள்வது பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகளைக் பாதியாகக் குறைக்க உதவும்.

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன் மீன் போன்றவை, இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும், இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கவும் செய்யும் என்பதை ஏற்கனவே நீங்கள் அறிவீர்கள். ஆனால், ஏன் பிறப்புறுப்புக்கு ஏன் முக்கியம் என்று தெரியுமா…? சால்மன் மீனில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஒட்டுமொத்த இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகின்றன. இதன் மூலம் நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராட முடியும். இதனால் பாக்டீரியல் தொற்று நீங்கும்.

கிரான்பெர்ரிஸ் பழச்சாறு குடிப்பதன் மூலம் சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகளைத் தடுக்கலாம். அதோடு கிரான்பெர்ரிஸ் பழங்களை சாப்பிடுவது பாக்டீரியா வஜினோசிஸ் போன்ற பிறப்புறுப்பு நோய்த் தொற்றுகளை தடுக்கிறது. இந்த பழத்தை எடுத்துக் கொள்ளும் போது அது சர்க்கரை இல்லாத கிரான்பெர்ரிஸ் பழங்கள் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி சர்க்கரை நிறைந்த கிரான்பெர்ரிஸ் பழங்கள் உங்களின் பிறப்புறுப்பு பிரச்சனைகளை மேலும் மோசமாக்கும்.

சர்க்கரை :
சர்க்கரை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது உங்களின் பிறப்புறுப்பு பகுதிக்கு நல்லதல்ல. எனவே நீங்கள் சர்க்கரை எடுத்துக் கொண்டால் அதில் கவனமுடன் இருக்க வேண்டும். அதிக அளவு சர்க்கரை பாக்டீரியா வஜினோசிஸுடன் நேரடியாக தொடர்புடையது. ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, நீங்கள் அதிக சர்க்கரையை உட்கொண்டால், அது பிறப்புறுப்பு ஆரோக்கியத்தை சீர்குலைத்து, பாக்டீரியா வஜினோசிஸ் போன்ற நோய்த் தொற்றுகளுக்கு வழி வகுக்கும்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

east tamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

east tamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

Leave a Comment