29.5 C
Jaffna
April 19, 2024
விளையாட்டு

இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

இலங்கை அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்துள்ளார்.

12 ஆண்டுகளாக இலங்கை அணியில் ஒருநாள், ரி20 போட்டிகளில் விளையாடி வந்தபோதிலும் உதான அதிக ஆட்டங்களில் ஆடவில்லை. இதுவரை 21 ஒருநாள் போட்டிகல், 35 ரி20 போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுகளை மட்டும்தான் உதான வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 78 ரன்களும், ரி20 போட்டிகளில் அதிகபட்சமாக 84 ரன்களையும் உதான சேர்த்துள்ளார்.

கடைசியாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், ரி20 தொடரில் உதான விளையாடிவிட்டு ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த 3 மாதத்தில் இலங்கை அணயிலிருந்து ஓய்வு அறிவிக்கும் 2வது சகலதுறை வீரர் உதான. கடந்த 3 மாதங்களுக்கு முன் திசர பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணியில் உதான இடம் பெற்றிருந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ரி20 தொடரில் உதான அறிமுகமாகினார். 2012ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் உதான அறிமுகமாகினார். வேகப்பந்துவீச்சாளரான உதான தனது பந்துவீச்சில் அதிகமான வேறுபாடுகளை வெளிப்படுத்தக்கூடியவர், ஸ்லோ-போல் அதிகமாக வீசி பேட்ஸ்மேன்களை அவ்வப்போது திணறடிக்கும் திறமை கொண்டவர்.

தனது ஓய்வு தொடர்பான கடிதத்தை உதான நேற்று இரவு இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிடுகையில் “கிரிக்கெட்தான் எப்போதும் என்னுடைய விருப்பமாக இருக்கும். களத்திலும் வெளியிலும் 100 சதவீத மரியாதையை நான் கிரிக்கெட்டுக்கு வழங்குவேன்.

கிரிக்கெட்டின் உத்வேகம், நாட்டின் பெருமையை எப்போதும் காப்பேன். எனக்கான நேரம் வந்துவிட்டது என்று நம்புவதால், அடுத்த தலைமுறை வீரர்களுக்காக நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்துதான் ஓய்வு பெற்றாலும், உள்நாட்டுப் போட்டிகளிலும், லீக் தொடரிலும் தொடர்ந்து விளையாடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

உதான கடந்த சில ஆண்டுகளாக எந்தவிதமான காயத்தாலும் பாதி்க்கப்படவி்ல்லை அப்படியிருக்கும் போது அவர் திடீரென ஓய்வு அறிவித்துள்ளது வியப்பாக இருக்கிறது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்ட பதிவில் “இலங்கையின் ரி20, ஒருநாள் அணிக்கு மதிப்புமிக்க வீரராகத் திகழ்ந்த உதான எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகளிர் கிரிக்கெட்டில் 300+ ஓட்டங்களை விரட்டியடித்த முதல் அணியானது இலங்கை!

Pagetamil

‘எனக்கு பதில் வேறு வீரரை செலக்ட் பண்ணுங்க’ – டுபிளெசியிடம் மேக்ஸ்வெல் வெளிப்படை!

Pagetamil

ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்டம்: பெங்களூரை புரட்டிப் போட்டது சன்ரைசஸ்!

Pagetamil

பத்திரன அபாரம்: மும்பையை வீழ்த்தியது சென்னை!

Pagetamil

பஞ்சாப்பை வீழ்த்தியது ராஜஸ்தான்!

Pagetamil

Leave a Comment