தென்கொரியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி 3.1 மில்லியன் ரூபா பணமோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி பகுதியை சேர்ந்த இருவரிடம் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகி விட்டனர்.
55, 26 வயதான இருவரே கைதாகினர்.
கைது செய்யப்பட்டவர்கள் வதிவிடமாக பேராதெனிய, ஜாஎல, நீர்கொழும்பு மற்றும் முருதலாவ போன்ற பல்வேறு பகுதிகளை கூறியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவர்களை 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1