தலங்கம, தலவத்துகொடவில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் சிகிச்சை பெற வந்த 36 வயது நபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தலங்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இறந்தவர் ஹோமாகமவை சேர்ந்தவர்.
மசாஜ் நிலையத்தில் பணியாற்றியவர்கள், உயிரிழந்தவரின் மனைவியிடமிருந்து பொலிசார் வாக்குமூலங்களை பதிவு செய்தனர். இறந்தவர் போதைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்தது.
இன்று பிரேத பரிசோதனை இடம்பெறும்.




