இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒழுக்க விதி மீறலில் ஈடுபட்ட, இலங்கை அணியின் மூன்று வீரர்களுக்கு போட்டித்தடை, அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட விசாரணைக்குழு இன்று நடத்திய விசாரணையை தொடர்ந்து, இந்த தண்டணைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் அதை அங்கீகரித்தால், 3 வீரர்களும் 1 வருடத்திற்கும் அதிக காலம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் ஆட முடியாது.
தனுஸ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராகவே தண்டனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நிரோஷன் டிக்வெல்லவுக்கு 18 மாதங்கள் தடையும், 25,000 அமெரிக்க டொலர் அபராதமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தனுஸ்க குணதிலக, குசல் மெண்டிஸ் ஆகியோருக்கும் 24 மாதங்கள் கிரிக்கெட் தடையும், 25,000 அமெரிக்க டொலர் அபராதமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.