கண்டாவளை பிரதேச செயலகத்தில் மேலும் ஐவருக்கு தொற்று. கடந்த திங்கட்கிழமை பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் நேற்று (28) வெளியாகியது.
68 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஐவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
2 நாட்கள் இயங்காது இருந்த கண்டாவளை பிரதேச செயலகத்தின் பணிகள் இன்று வியாழக்கிழமை முதல் வழமைக்கு திரும்புகின்றது.
அதற்கு அமைவாக திட்டமிடல் கிளை, சமுர்த்தி வங்கி தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறும் எனவும், மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறும் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் தெரிவிக்கின்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1