மூதாட்டியின் இரண்டு கைகளிலும் அடுத்தடுத்து இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது: யாழில் அதிர்ச்சி சம்பவம்!

Date:

யாழில் பெண் ஒருவருக்கு இன்று (29) இரு கையிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முன்னெடுக்கப்பட்டது.

இந்த செயற்திட்டத்தில் யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பூசி வழங்கும் மையத்தில் கொழும்புத்துறை J/61 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இதே பிரிவைச் சேர்ந்த வயது-66 வயோதிப பெண்ணுக்கு இரு கையிலும் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணின் ஒரு கையில் தாதி ஒருவர் ஊசி போட்டு விட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட இது தெரியாமல் இன்னொரு தாதி அங்கு வந்து மற்ற கையை காட்டுமாறு கூறி ஊசி போட்டுள்ளார்.

தவறுதலாக இடம்பெற்றுவிட்டதாகவும் உடலில் உபாதை ஏற்பட்டால் அறிவிக்குமாறும் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

அண்மையில் கண்டியில் மூதாட்டியொருவருக்கு மொடர்னா தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்தப்பட்டது. உலகில் இப்படியான முதலாவது சம்பவமாக அது இருக்கலாமென சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

spot_imgspot_img

More like this
Related

தீபாவளியன்று விபத்தில் சிக்கிய மனோ கணேசன்: மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக வழக்கு!

நவம்பர் 8 ஆம் திகதி தீபாவளித் திருநாளின் இரவு, நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...

இலங்கை வந்த நடிகை பூஜா ஹெக்டே

இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, இலங்கைக்கான குறுகிய காலப் பயணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்