27.9 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

அடுப்படியில் பெற்றோலை வைத்த கணவன்; அறியாமல் அடுப்பை மூட்டிய இளம் பெண் எரிந்து மரணம்: யாழில் துயரம்!

அடுப்படிக்கு கீழே பெற்றோல் போத்தல் இருந்ததை அறியாமல் தீக்குச்சியை அணைக்காமல் போட்டதால் குடும்பப் பெண் எரிகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

கட்டைக்காடு, முள்ளியானைச் சேர்ந்த யோகேஸ்வரன் பாலரஞ்சிதா (32) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார்.

கடந்த 22 ஆம் திகதி மதியம் நின்று சமைக்கும் விறகு அடுப்பில் தேநீர் வைப்பதற்கு மண்ணெண்ணைய் ஊற்றி நெருப்பை வைத்துவிட்டு தீக்குச்சியை கீழே போட்டுள்ளார்.

அடுப்புக்கட்டுக்கு கீழே கணவர் பெற்றோல் போத்தலை வைத்திருந்தமை தெரியாமல் குடும்பப் பெண் நெருப்பு குச்சை போட்டமையால் ஏற்பட்ட தீவிபத்தில் அவர் சிக்கியுள்ளார்.

உடம்பில் தீப்பற்றியதால் அவர் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார்.

எரிகாயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பலனின்றி 5 நாட்களின் பின் அந்தப் பெண் நேற்று (27) காலை உயிரிழந்தார்.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இன்று மேற்கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பிரதி அமைச்சருக்கு மீனவர்கள் எதிர்ப்பு

Pagetamil

யாழில் அதிக போதையால் இளைஞன் உயிரிழப்பு

east tamil

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் கைது

east tamil

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க சட்டத்தரணிகள் குழு அமைப்பு

east tamil

பிரபல தொழிலதிபர் ஹரி ஜயவர்தன காலமானார்

east tamil

Leave a Comment