காதலரைப் பிரிந்தாரா ஏமி ஜாக்சன்?

Date:

ஏமி ஜாக்சன் தனது காதலரை விட்டுப் பிரிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டிஷ் நடிகையான ஏமி ஜாக்சன் ‘மதராசபட்டினம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ‘ஐ’, ‘தங்கமகன்’, ‘தெறி’, ‘2.0’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் காதலர் ஜோர்ஜ் பனாயிடூ என்ற தொழிலதிபருடன் வாழ்ந்து வந்தார்.

இதில் ஏமி ஜாக்சன் கர்ப்பமானார். அவருக்கு 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து ஜோர்ஜ் பனாயிடூ – ஏமி ஜாக்சன் இருவரும் இத்தாலியில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.

தனது இன்ஸ்டாகிராம் பதிவில் காதலருடன் இருப்பது, கர்ப்பமாக இருப்பது உள்ளிட்ட புகைப்படங்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார் ஏமி ஜாக்சன். தற்போது தனது காதலர் ஜோர்ஜ் பனாயிடூ சம்பந்தப்பட்ட அனைத்துப் புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்.

ஏமி தன் காதலரை விட்டுப் பிரிந்ததால்தான் இவ்வாறு செய்திருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் ஏமி ஜாக்சன் இதுவரை வெளியிடவில்லை.

spot_imgspot_img

More like this
Related

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் 800 லீற்றர் கசிப்புடன் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி...

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்