25.9 C
Jaffna
December 24, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

ரிஷாத் வீட்டில் 11 மலையக யுவதிகள் துன்புறுத்தப்பட்டனர்… சிலர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகினர்: தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாக மலையக பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 11 யுவதிகள் கடுமையான வன்முறைக்குள்ளாகியதாகவும், அவர்களில் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக அழைத்து வரப்பட்ட யுவதியொருவர், பம்பலப்பிட்டி பகுதியில் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்தும் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ரிஷாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ வீட்டில் வைத்து டயகம பகுதியை சேர்ந்த 22 வயதான யுவதியொருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது பற்றிய முழுமையான தகவல்கள் கிடைத்ததையடுத்து, ரிஷாத் பதியுதீனின் மனைவியின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை துஷ்பிரயோகம் செய்த அறையையும் யுவதி அடையாளம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ரிஷாத் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரன், தரகர் ஆகியோர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.

சிறுமிகளை பணிப்பெண்களாக அமர்த்தியமை, துன்புறுத்தியமை, பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, மேற்கு மாகாண மகளிர் குழந்தைகள் பிரிவை சேர்ந்த வருணி போகவத்த தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்களாக செயற்பட்ட மலையகத்தை சேர்ந்த 11 யுவதிகளிடமும் வாக்குமூலம் பெறுவதற்காக இந்த குழு அந்த பகுதிகளிற்கு சென்றுள்ளது.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள தரகர் பொன்னையா என்பவரே, மலையகத்தை இத்தனை யுவதிகளையும் பணிப்பெண்களாக அழைத்து வந்துள்ளார்.

பணிப்பெண்களை வழங்கி, தரகர் பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த சிறுமி இஷாலினி அண்மையில் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். அவர் நீண்டகாலமாக துஷ்பிரயோகத்திற்குள்ளாகியது தெரிய வந்துள்ளது.

சிறுமியை 8 மாதங்களாக வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றும், ஒரு மாதத்திற்கும் மேலாக தனது பெற்றோருக்கு தொலைபேசியில் பேச அனுமதிக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

சிறுமி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டின் பின்னால் ஒரு தனி சிறிய அறையில் தங்க வைக்கப்பட்டார். அந்த அறையில் மின்சாரம் இல்லை. இருவர் படுக்கக்கூடிய இரும்பு கட்டில் இடப்பட்டிருந்தது.

இரவு 10.30 மணியளவில் சிறுமியை அறையில் வைத்து கதவு மூடப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு அறை திறக்கப்பட்டது. இதற்கிடையில், அவர் கழிப்பறைக்கு செல்ல கூட அனுமதிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேற்கு மாகாணத்தின் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி தேசபந்து தென்னக்கோனின் மேற்பார்வையில் ஐந்து சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

Leave a Comment