அரியாலையில் துப்பாக்கிச்சூடு!

Date:

அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் நேற்று இரவு சட்டவிரோத மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தின் மீது பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. எனினும் உழவு இயந்திரத்தில் பயணித்த மூவரும் தப்பிச் சென்றுள்ளதாக யாழ்ப்பான பொலிஸார் தெரிவித்தனர்.

உழவு இயந்திரத்தின் ரயர் பகுதிமீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையால் உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.

இன்று அதிகாலை 1 40 மணி அளவில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தினை கடமையில் இருந்த போலீசார் மறித்த போது வாகனம் நிறுத்தாது சென்றதன் காரணமாக உழவு இயந்திரத்தின் சில்லுபகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து உழவு இயந்திரத்தில் பயணித்த மூவரும் தப்பிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு தெர்ப்பிகலையில் இராணுவ ரக்கவண்டி மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழப்பு இராணுவ சாரதி கைது

மட்டக்களப்பு கிரான் தொப்பிக்கலை வீதியில் இராணுவரக்வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்...

‘இன்ஸ்டா’ ஜோடி கைவரிசை: 15 கிலோ நகைகள் மீட்பு

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஷாந்த்தின் தந்தை...

எம்.கே.சிவாஜிலிங்கம் காலமானார்

மூத்த அரசியல் போராளியும், வல்வெட்டித்துறை நகரசபை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்