கோலாகலமாக தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக்

Date:

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.

டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கி ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை நடக்கிறது. டோக்கியோவில் கண்ணைப் பறிக்கும் வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுடன் ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இலங்கை நேரப்படி இன்று மாலை கோலாகலமாக தொடங்கியது.

ஜப்பானில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக தொடக்க நாள் நிகழ்ச்சியில் ஒலிம்பிக் தொடக்க விழாவில் 950 பார்வையாளர்கள் மட்டும் பங்கேற்றனர். முதலிலில் ஜப்பானின் தேசிய கீதம் படப்பட்டது. மேடைக்கு ஒலிம்பிக் சங்க தலைவர் தோமஸ் பாக் வருகை தந்தார்.

விழாவின் முக்கிய அம்சமாக 204 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுடன்அணிவகுத்து சென்றனர். ஒலிம்பிக் தொடக்க விழா வீரர்கள் அணிவகுப்பில் முதல் நாடாக ஒலிம்பிக்கை தோற்றுவித்த கிரீஸ் நாடு சென்றது.

கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான வீரர்கள் பங்கேற்கவில்லை. குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இலங்கை அணி அறிமுகப்படுத்தப்பட்ட போது, மார்க்கப்போலோ தான் கண்ட தீவுகளிலேயே இலங்கையே மிக அழகானது என குறிப்பிட்டதை மேற்கோள் இடப்பட்டது.

இலங்கை அணி அறிமுகப்படுத்தப்பட்ட காட்சி

 

spot_imgspot_img

More like this
Related

நவம்பரில் 3 எரிவாயு கப்பல்கள் வருகின்றன!

2026 நவம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு 3 சமையல் எரிவாயு கப்பல்களைக் கொண்டுவருவதற்குத்...

இ.போ.ச. வின் தொடர் பிடிவாதம்: பழைய இடத்திற்கே திரும்பிய தனியார் பேருந்துகள்!

யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையம் மீண்டும் கைவிடப்பட்டுள்ளது. நீண்ட கால இழுபறிக்கு பின்னர்...

30 ஆண்டுகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் – நவம்பர் 9 அன்று அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாடு தழுவிய ரீதியில் சுகவீன விடுப்புப் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் 30 வருடகாலமாகத் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்