சனம் ஷெட்டியை விட குள்ளமானவர் சூர்யா; விஜய் ரசிகர்கள் கொலை வெறி!

Date:

சூர்யாவின் பிறந்த நாளான இன்று சூர்யாவை வாழ்த்தி பல நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் புதிய படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் போன்றவை வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 40 படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என பெயர் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் அடங்கிய மோஷன் போஸ்டர் ஆகியவற்றை வெளியிட்டு சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது சன் பிக்சர்ஸ்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நடிகை சனம் ஷெட்டி சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அதைப் பார்த்த விஜய் ரசிகர் ஒருவர், சனம் ஷெட்டியை விட சூர்யா குள்ளமாக இருப்பதை சுட்டிக்காட்டினார். இதை கவனித்த சனம் செட்டி உடனடியாக, உயரத்தில் என்ன இருக்கு சகோதரா, அவங்க திறமை தான் பெருசு என குறிப்பிட்டு பதிலடி கொடுத்தார்.

இதைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் தற்போது அந்த ரசிகரின் தலைமுறையினரை தோண்டி எடுத்து காதுகள் கருகும் அளவுக்கு கெட்ட வார்த்தைகளில் திட்டி வருகின்றனர். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்