முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீமூட்டி உயிரிழந்த பணிப்பெண்ணான சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் தனிநபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் கொழும்பை சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தின், டயகம பகுதியை சேர்ந்த 16 வயதான இஷாலினி ஜூட் குமார் என்ற 16 வயதான சிறுமி, மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டிய நிலையில், 72 வீத தீக்காயத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 12 நாட்களின் பின்னர் கடந்த 15ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.
அவர் நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு வந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1