இலங்கை நான்காவது கொரோனா அலையை நெருங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இன்று ஊடகவியலாளர் மத்தியில் பேசிய சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன, COVID-19 க்கு எதிரான தடுப்பூசிகளில் நம்பிக்கை வைப்பதன் மூலம் மட்டுமே நாடு முன்னேற முடியாது என தெரிவித்தார்.
நாட்டில் இதுவரை 8 வீதமானவர்களிற்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
COVID-19 டெல்டா வைரஸ் மாறுபாடு வேகமாக பரவி வருகிறது, இப்போது நாடு நான்காவது அலையின் விளிம்பில் உள்ளது.
பல்வேறு மருத்துவமனைகளின் தகவல்களின் அடிப்படையில் இலங்கை இப்போது கொரோனா வைரஸின் நான்காவது அலையின் தொடக்கத்தில் உள்ளது என்றார்.




