இந்தியா

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்; உல்லாசமாக இருந்ததை பார்த்ததால் நடந்த கொடூர செயல்!

கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்ததை கண்ட கணவரை, தீர்த்துக்கட்டி விட்டு, மதுபோதையில், விஷம் அருந்தி இறந்ததாக மனைவி நாடகம் ஆடிய சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள மீனாட்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த கட்டத்தொழிலாளியான முருகன். இவரது மனைவி வனஜா சித்தாள் வேலை செய்து வந்தார். இருவருக்கும் 7 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் இருந்தனர். நன்றாக சென்றுக் கொண்டிருந்த இந்த குடும்பத்தில் புகுந்து நாசமாக்கியவர் கிருஷ்ணகுமார். முருகன்-வனஜா வசித்து வந்த அதேப் பகுதியில் வசித்து வந்தவர். நட்புடன் பழகிவந்த கிருஷ்ணகுமாருக்கும் வனஜாவுக்கும் இடையே கள்ளக் காதல் மலர்ந்தது. அவ்வப்போது இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இது குறித்து அரசல் புரசலாக அறிந்த கணவர் வனஜாவை கண்டிக்க, இருப்பினும் 5 வருட காதலை முறித்துக் கொள்ளாமல் கிருஷ்ணகுமாருடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார் வனஜா.

இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனஜாவின் கணவரான முருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மதுபோதையில் விஷத்தை அருந்தி கணவர் இறந்ததாக வனஜா நாடகம் ஒன்றை இயற்றி உறவினர்களை நம்ப வைத்துள்ளார். இதனை நம்பி அவருக்கு இறுதி சடங்குகளும் நடைபெற்ற நிலையில், முருகனின் சடலத்தில் ஏற்பட்டிருந்த காயங்களை கண்ட அக்கம்பக்கத்தினர் ஏதோ தவறாக இருந்ததை உணர்ந்தனர்.

காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். முருகனின் சடலத்தை கைப்பற்றிய அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வனஜாவிடம் விசாரணை நடத்தினர். அதில் முன்னுக்கு பின் முரணாக வனஜா பதிலளிக்க, கிருஷ்ணகுமாரின் உறவையும் கண்டுபிடித்தனர் காவல்துறையினர்.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கிருஷ்ணகுமாரும், வனஜாவும் தனிமையில் உல்லாசமாக இருந்ததை முருகன் கண்கூடாக கண்டதுடன், இருவரையும் சரமாரியாக திட்டியதோடு, ஊரை கூட்டி உண்மையை சொல்லப் போவதாக தெரிவித்துள்ளார். இதனால் அச்சமடைந்த வனஜாவும், கிருஷ்ணகுமாரும் சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும், உறவினர்களிடம் இருந்து தப்பிக்க அவர் போதையில் விஷம் அருந்தி இறந்ததாக நாடகமாடியதாகவும் ஒப்புக் கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இலங்கைக்கு கடத்தவிருந்த மஞ்சள் மூட்டைகள் மீட்பு!

Pagetamil

ஒரே ஒரு போன் கால் மூலம் அமெரிக்காவை பணிய வைத்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்!

divya divya

மும்பை – தமிழகம் மூன்று லட்சம் தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் வந்தடைந்தன!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!