தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதை போல தற்போதைய அரசாங்கமும் விரைவில் மக்களால் காணாமல் ஆக்கப்படும் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர வினோ நோகராதலிங்கம்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்கும் போது, நாடாளுமன்றத்தின் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரைாயடப்படவில்லை. அப்படி கலந்துரையாடப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
எனினும், வாழ்க்கைச் செலவு உயர்விற்கு காரணமான எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதை ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளது என்றார்.