முக்கியச் செய்திகள் விளையாட்டு

80 பந்துகள் மீதமிருக்க இலங்கையை உருட்டியெடுத்தது இந்தியா!

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் எந்த சிரமம், நெருக்கடியில்லாமல் மிக இலகுவாக இந்தியா வெற்றியீட்டியது.

அனுபவமும், ஆட்டத்திறனுமில்லாத இலங்கையணியை ஊதித்தள்ளியது என்றே கூற வேண்டும்.

முதலில் ஆடிய இலங்கை 262 ஓட்டங்களை குவித்த போதும், 500 ஓட்டங்கள் அடித்தாலும் எதிரணியை கட்டுப்படுத்த முடியாத பலவீனமான பந்துவீச்சு வரிசையை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் போனது.

263 என்ற இலக்கை 36.4 ஓவர்களிலேயே இந்தியா எட்டியது. அதாவது 80 பந்துகள் மீதமிருக்க இந்தியா வெற்றியீட்டியது.

தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 24 பந்துகளில் 43 ஓட்டங்கள் என காட்டடி தொடக்கத்தை வழங்கினார். 5.3 ஓவர்களில் அணி 58 ஓட்டங்களை பெற்றிருந்த போது அவர் 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

ஷிகார் தவண் 86, சூர்யகுமார் யாதவ் 31 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இஷான் கிஷன் 42 பந்துகளில் 59 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.

இதில் இஷான் கிஷண், சூர்யகுமார் யாதவ் இந்தியா சார்பில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகினர்.

இலங்கை சார்பில் தனஞ்ஜய டி சில்வா 49 ஓட்டங்களிற்கு 2 விக்கெட் வீழ்த்தினார். வணிந்து ஹசரங்க விக்கெட் விழுத்தவில்லை. ஆனால் ஓட்டவீதம் ஓவருக் 5 என்ற கணக்கில் வைத்திருந்தார். ஏனையவர்கள் ஓவருக்கு 6 இற்கும் அதிக ஓட்டங்களை வாரி வழங்கினர்.

முன்னதாக இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்களை பெற்றது.

ஆட்டநாயகன் ப்ரித்வி ஷா.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Related posts

கொரோனா தொற்று அதிகரித்தாலும் நாட்டை முடக்க மாட்டோம்: பிரதமர்!

Pagetamil

கடன் வாங்கி வீரர்களிற்கு ஊதியம் கொடுத்தோம்: மேற்கிந்தியத்தீவுகளின் துயரக்கதை!

Pagetamil

உலக டென்னிஸ் போட்டியில் 13 வயது தமிழக மாணவன்; இந்தியா சார்பில் பங்கேற்கிறார்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!