28.2 C
Jaffna
April 26, 2024
இலங்கை

மேலும் 4 விலங்குகளிற்கு கொரோனா தொற்று!

தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் இரண்டு சிம்பன்சிகள் மற்றும் இரண்டு ஒராங்குட்டான்கள் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசானநாயக்க தெரிவித்தார்.

விலங்குகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முன்னதாக, 2013 ஆம் ஆண்டில் சியோலில் ஒரு மிருகக்காட்சிசாலையில் இருந்து பரிசாக வழங்கப்பட்ட பதினொரு வயது சிங்கம் ‘தோர்’, கோவிட் தொற்றிற்குள்ளானது. இலங்கையில் ஒரு விலங்கு தொற்றிற்குள்ளான முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

பின்னர், 12 வயதான சிங்கம் ‘ஷீனா’ தொற்றிற்குள்ளானது. தற்போது இரண்டும் குணமடைந்து விட்டன.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய சுகாதார வழிகாட்டுதல்களின்படி 25% பார்வையாளர்கள் எந்த நேரத்திலும் விலங்கியல் பூங்காக்களை பார்வையிட முடியும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பல்டி குழுவின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க

Pagetamil

மாணவியுடன் முறையற்ற பேசிய நடத்துனருக்கு கத்திக்குத்து: இதுவரை 5 பேர் கைது!

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Pagetamil

‘முஸ்லிம்களில் எனக்கு நெருக்கமானவர்கள் இல்லை’: கர்தினாலின் குற்றச்சாட்டுக்கு கோட்டா பதில்!

Pagetamil

வேலையற்ற பட்டதாரிகள் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட தீர்மானம்!

Pagetamil

Leave a Comment