வெளிநாட்டிலிருந்து வருபவர்களிற்கான சுகாதார வழிகாட்டலில் திருத்தம்!

Date:

பயணத் தடை விதிக்கப்படாத நாடுகளில் இருந்து இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசியைப் பெற்று இலங்கைக்கு வருபவர்கள் முதல் பிசிஆர் பரிசோதனை மூலம் கொவிட் நோயால் பாதிக்கப்படாவிட்டால் 7 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார்.

புதிய வழிகாட்டுதல்களின் படி, பயணத் தடை இல்லாத நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் முதல் பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாவிட்டால் தனிமைப்படுத்தப்படாமல் நாட்டிற்குள் பிரவேசிக்க வாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், 2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 7 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கான பயணத் தடை நடைமுறையில் உள்ள நிலையில் வியட்நாம் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கையர்கள் அரசாங்கத்தின் அனுமதியுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முடியும் என்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மையத்தில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்